search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்திய இடங்கள்
    X

    வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்திய இடங்கள்

    சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமானவரி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.
    சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமானவரி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.



    சோதனை நடந்த இடங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

    * சசிகலாவின் கணவர் நடராஜனின் வீடு, தஞ்சை அருளானந்த நகர்.

    * சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகனும், டி.டி.வி.தினகரனின் மைத்துனருமான டாக்டர் வெங்கடேஷ் வீடு. தஞ்சை மேல வஸ்தாசாவடி.

    * சசிகலாவின் அண்ணன் மகன் மறைந்த டி.வி.மகாதேவன் வீடு, தஞ்சை பரிசுத்தம் நகர்.

    * டி.வி.மகாதேவனின் சகோதரர் தங்கமணி வீடு, தஞ்சை அருளானந்தநகர்.

    * நடராஜனின் சகோதரி மகன் சின்னையா என்ற வெங்கடேசன் வீடு, தஞ்சை அருளானந்த நகர்.

    * ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் (அம்மாஅணி) ராஜேஸ்வரன் வீடு, தஞ்சை பிலோமினா நகர்.

    * தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. (அம்மா அணி) வக்கீல் பிரிவு செயலாளர் வக்கீல் வேலுகார்த்திகேயன் வீடு, தஞ்சை மாதாக்கோட்டை வங்கி ஊழியர் காலனி.

    * சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு, திரு வாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை நகர்.

    * திவாகரன் வீடு, சுந்தரக்கோட்டை.

    * திவாகரனின் பண்ணை வீடு, மன்னார்குடியை அடுத்த ரிஷியூர்.

    * திவாகரனுக்கு சொந்தமான மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி.

    * அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் (அம்மாஅணி) டி.டி.வி.தினகரன் வீடு, மன்னார்குடி மன்னை நகர்.

    * திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. (அம்மாஅணி) செயலாளர் எஸ்.காமராஜ் வீடு, மன்னார்குடி.

    * திவாகரனின் நண்பர் தமிழ்ச்செல்வன் வீடு, மன்னார்குடி மன்னை நகர்.

    * திவாகரனின் உதவியாளர் விநாயகம் வீடு, மன்னார்குடியை அடுத்த கீழத் திருப்பாலக்குடி.

    * முன்னாள் கவுன்சிலர் ராசுப்பிள்ளை, மன்னார்குடி.

    *திவாகரனின் ஆதரவாளர் சுஜய், மன்னார்குடி.

    * திவாகரனின் ஆதரவாளர் செல்வம் வீடு, மன்னார்குடி.

    * ஓய்வு பெற்ற முன்னாள் வேளாண்மை அதிகாரி நடேசன், திருத்துறைப்பூண்டி.

    * செங்கமலத்தாயார் அறக்கட்டளை மகளிர் கல்லூரி ஊழியர் அன்புக்கரசி வீடு, மேல மரவாக்காடு.

    * திவாகரன் ஆதரவாளர் சித்தார்த்தன் வீடு, மன்னார்குடி அருகே உள்ள அசேஷம்.

    * அமைச்சர் காமராஜ் உறவினர் வக்கீல் உதயகுமார் வீடு, மன்னார்குடி.

    * அ.தி.மு.க. (எடப்பாடி அணி) மாவட்ட ஜெய லலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மன்னார்குடி.

    * சசிகலாவின் சகோதரி வனிதாமணி வீடு, மன்னார்குடி மன்னை நகர்.

    * திவாகரனின் உறவினர் அக்ரிராஜேந்திரன் வீடு, புள்ளவராயன்குடிக்காடு.

    * திரைப்பட வினியோகஸ்தர் வெங்கடாசலத்தின் வீடு, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம்.

    * நாமக்கல்லில் உள்ள சசிகலாவின் வக்கீல் செந்தில் வீடு.

    * வக்கீல் செந்திலின் ஜூனியர் வக்கீல் பாண்டியன் வீடு.

    * வக்கீல் செந்திலின் நண்பர் வக்கீல் பிரகாஷ் அலுவலகம்.

    * வக்கீல் செந்திலுடன் இணைந்து தொழில் செய்யும் சுப்பிரமணியன் என்பவரின் வீடு, அலுவலகம்.

    * மோகனூர் அருகே உள்ள சுப்பிரமணியனின் கோழிப்பண்ணை.

    * தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஏ.வி.பாலுசாமியின் வீடு, அலு வலகம்.

    * கோடநாடு எஸ்டேட், நீலகிரி மாவட்டம்.

    * கர்சன் எஸ்டேட்.

    * கோடநாடு பங்களாவில் வேலைபார்த்த சஜீவனின் கடைகள், காபி எஸ்டேட், ஷோரூம், குடோன்.

    * கோவையைச் சேர்ந்த மணல் குத்தகைதாரர் ஆறுமுகசாமியின் அலுவலகம், வீடு.

    * கடலூர் சரசுவதி நகரில் உள்ள சசிகலாவின் குடும்ப ஜோதிடர் சந்திரசேகரின் வீடு.

    * ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள சசிகலா ஆதரவாளரின் காகித ஆலை.

    * திருச்சி கே.கே.நகரில் உள்ள சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் சம்பந்தி கலியபெருமாள் வீடு.

    * திருச்சி ராஜா காலனியில் உள்ள டாக்டர் சிவகுமார் வீடு.

    * புதுக்கோட்டை மாவட்டம் நெற்குப்பையில் உள்ள அ.தி.மு.க. (அம்மா) மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் வீடு.

    * புதுச்சேரி அருகே ஆரோவில் பொம்மையார் பாளையத்தில் உள்ள டி.டி.வி.தினகரனின் பண்ணை வீடு.

    * பெங்களூருவில் உள்ள தினகரனின் ஆதரவாளர் வா.புகழேந்தியின் வீடு, கர்நாடக மாநில அ.தி.மு.க. அலுவலகம்.

    மேற்கண்டவை உள்ளிட்ட 187 இடங்களில் சோதனை நடைபெற்றது. 
    Next Story
    ×