search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வால்பாறையில் சுகாதார ஆய்வாளரை குடிபோதையில் கன்னத்தில் அறைந்த வாலிபர்
    X

    வால்பாறையில் சுகாதார ஆய்வாளரை குடிபோதையில் கன்னத்தில் அறைந்த வாலிபர்

    குடிபோதையில் சுகாதார ஆய்வாளரை கண்ணத்தில் அறைந்த வாலிபர் மீது வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை பச்சமலை எஸ்டேட்டை சேர்ந்தவர் காமராஜ் (வயது 57). இவர் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக உள்ளார்.

    சம்பவத்தன்று வால்பாறை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஜாகீர் உசேன் (27) என்பவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு வந்தார்.

    அப்போது அங்கு இருந்த டாக்டர்கள் இந்த ஆஸ்பத்திரியில் பெண்களுக்கு பிரசவம் மட்டுமே பார்ப்போம். நீங்கள் வந்து விட்டீர்கள் சிறிது நேரம் காத்திருங்கள் நாங்கள் சிகிச்சை அளிக்கிறோம் என்று கூறினார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ஜாகீர் உசேன் டாக்டர்களிடம் தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த சுகாதார ஆய்வாளர் காமராஜ், ஜாகீர் உசேனை சமாதானம் செய்தார். திடீரென ஜாகீர் உசேன் சுகாதார ஆய்வாளர் காமராஜின் கன்னத்தில் அறைந்தார்.

    இது குறித்து ஆய்வாளர் காமராஜ் வால்பாறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாகீர் உசேனை போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜாகீர் உசேன் தலையில் காயம் அடைந்ததால் அவர் தற்போது பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    Next Story
    ×