search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி-கருணாநிதி சந்திப்பை கொச்சைப்படுத்த வேண்டாம்: கனிமொழி எம்.பி.
    X

    மோடி-கருணாநிதி சந்திப்பை கொச்சைப்படுத்த வேண்டாம்: கனிமொழி எம்.பி.

    மூத்த தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடி, கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்பை கொச்சைப்படுத்த வேண்டாம் என கனிமொழி கூறியுள்ளார்.
    கோவை:

    கோவையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பின்பு கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது,

    பண மதிப்பு நீக்கத்தை அறிவித்த போது நாட்டில் கள்ளநோட்டு ஒழிந்து விடும். ஊழல் ஒழிந்துவிடும் என்றார்கள். 5 லட்சம் கோடி கருப்பு பணம் மீண்டும் புழக்கத்திற்கு வராது என்று சொன்னார்கள். ஆனால் 99 சதவீத பணம் திரும்பி வந்து விட்டது. 1 சதவீதம் மட்டுமே கருப்பு பணம் முடங்கி கிடக்கிறது. பணம் மதிப்பு நீக்க பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. ஓராண்டுக்கு பின்னரும் அதே நிலை நீடிக்கிறது. லஞ்சம், ஊழல் குறைந்தபாடில்லை.

    பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் எந்த பலனும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    2ஜி தீர்ப்பு வரும் நேரத்தில் பிரதமர் மோடி உங்கள் வீட்டிற்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே என்ற நிருபர்களின் கேள்விக்கு கனிமொழி எம்.பி. பதில் அளிக்கும் போது, மூத்த தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடி, தலைவர் கலைஞரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்பை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றார்.

    பண மதிப்பிழப்புக்கு பின்பு டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்த நேரத்தில் மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாக இருந்தது. தற்போது அது குறைந்துவிட்டது என்றார்.
    Next Story
    ×