search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து புதுவை காங் - தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்
    X

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து புதுவை காங் - தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து புதுச்சேரி யூனியன் பிரசேதத்தில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    மத்திய பா.ஜனதா அரசின் பண மதிப்பிழப்பு நாடு முழுவதும் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கின்றனர்.

    புதுவை மாநிலத்தில் காங்கிரஸ்- தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய நீதிக்கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, படைப்பாளி கட்சி, மாணவர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட கூட்டணி மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, தி.மு.க. அமைப்பாளர்கள் சிவக்குமார், சிவா, புதிய நீதிக்கட்சி பொன்னுரங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவ.பொழிலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏக்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, பாலன், விஜயவேணி, தீப்பாய்ந்தான், முன்னாள் முதல்- அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பெத்தபெருமாள், ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா,

    காங்கிரஸ் துணை தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ், பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, தனுசு, ஏ.கே.டி. ஆறுமுகம், சேவாதள தலைவர் சிபி, முன்னாள் கவுன்சிலர் ராஜன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ரகுமான், சங்கர்,

    காங்கிரஸ் பிரமுகர்கள் கே.எஸ்.பி.ரமேஷ், கண்ணன், ஆர்.இ.சேகர், தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜானகி ராமன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு, துணை அமைப்பாளர் குணா திலீபன், தி.மு.க. பிரமுகர் கதிரொலி மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோ‌ஷமிட்டனர்.
    Next Story
    ×