search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை: கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல்
    X

    தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை: கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல்

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்தது. இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கி படிப்படியாக தீவிரம் அடைந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் மழை நீர் தேங்கியதால், பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது.



    இந்த பருவமழை நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், வெள்ளம் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள சில பள்ளிகளுக்கு மட்டும் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    மழை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று காலை மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. காலை முதலே சென்னை  மற்றும் புறநகர்ப் பகுதிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.  தாம்பரம், குரோம்பேட்டை, எண்ணூர், பாடி, வில்லிவாக்கம்,  திருவான்மியூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்வதால் பள்ளி செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    இதற்கிடையே, தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்றும் கூறியுள்ளது.
    Next Story
    ×