search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மேலூர் விவசாயிகள் முற்றுகை போராட்டம்
    X

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மேலூர் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

    பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக்கோரி மேலூரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    மதுரை, தேனி மாவட்ட விவசாயத்திற்காக வைகை அணையில் இருந்து பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. பெரியாறு கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் அதன் கடைமடை பகுதியான மேலூர் குறிச்சிப்பட்டி கண்மாய் வரை வரவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலூர் பகுதியில் வைகை அணை தண்ணீரை நம்பி ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது வைகை அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாய பணிகள் தொடங்கலாம் என்று இருந்த விவசாயிகள் தண்ணீர் வராததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஒரு போக பாசனத்திற்காக குறிச்சிப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×