search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே ஊருக்குள் சிறுத்தை புகுந்தது: பொதுமக்கள் பீதி
    X

    கோவை அருகே ஊருக்குள் சிறுத்தை புகுந்தது: பொதுமக்கள் பீதி

    கோவை அருகே இன்று அதிகாலை ஊருக்குள் சிறுத்தை புகுந்தது. இதனால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
    பேரூர்:

    கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப்பாளையத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை அங்குள்ள வள்ளலார் வட்டப்பாதை வீதிக்குள் புகுந்தது.

    அப் பகுதியில் ஆறுச்சாமி என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். அவருக்கு 15 ஆடுகள் உள்ளது. அதில் ஒரு ஆட்டின் கழுத்து, முதுகு பகுதியில் கடித்து சிறுத்தை ரத்தம் குடித்தது. இதில் ஆடு இறந்தது. மற்றொரு ஆட்டின் ரத்தத்தை குடிக்க முயன்றது.

    ஆடு கத்தியது. இதனால் ஆறுச்சாமி அங்கு வந்தார். சிறுத்தை நிற்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மதுக்கரை வனவர்கள் கண்ணன்,சோழ மன்னன், வேட்டை தடுப்பு காவலர் சுப்பிரமணி, விவசாயிகள் பெரியசாமி, நாகராஜ் மற்றும் பொது மக்கள் சிறுத்தை புலியை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    பின்னர் கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து எங்கிருந்து வந்தது என ஆய்வு செய்தார்.

    ஆட்டை கடித்து ரத்தம் குடித்து விட்டதால் மீண்டும் சிறுத்தை ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளதால் தீத்திப்பாளையம் பகுதி பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

    மேலும் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு அடிக்கடி யானைகள் வந்து அட்டகாசம் செய்து வந்த நிலையில் தற்போது சிறுத்தை நுழைந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    Next Story
    ×