search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    54 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம்
    X

    54 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம்

    வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியை நெருங்கி வருகிறது.
    கூடலூர்:

    நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 127 அடியாக இருந்தது.

    அதன்பின்பு வைகை அணையில் நீர் தேக்குவதற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 121.70 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 241 கன அடி நீர் வந்துகெண்டிருக்கிறது. அணையில் இருந்து 467 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 53.38 அடியாக உள்ளது. 57 அடியை எட்டினால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    இருந்தபோதும் தண்ணீர் வரத்து குறைந்தே காணப்படுகிறது. 146 கன அடி நீரே வருகிறது. 60 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.35 அடியாக உள்ளது. 10 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.40 அடியாக உள்ளது. வருகிற 30 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. மழை எங்கும் இல்லை. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×