search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மூர் தனியார் சாக்லேட் கம்பெனியில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பதை கலெக்டர் ராமன் கண்டு பிடித்த காட்சி
    X
    அம்மூர் தனியார் சாக்லேட் கம்பெனியில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பதை கலெக்டர் ராமன் கண்டு பிடித்த காட்சி

    ராணிப்பேட்டை அருகே டெங்கு ஆய்வு: தனியார் கம்பெனி, பள்ளிக்கு ரூ.1.10 லட்சம் அபராதம்- கலெக்டர்

    ராணிப்பேட்டை அருகே டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் தனியார் கம்பெனி மற்றும் பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்தார்,

    வாலாஜா, அக்.23-

    வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு விழிப்புணர்வும், கொசு ஒழிப்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    ராணிப்பேட்டை அம்மூர் அல்லிகுளம் பகுதிகளில் கலெக்டர் ராமன் இன்று ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை அடுத்த அம்மூரில் உள்ள தனியார் பள்ளியில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்த போது அங்கு உள்ள தென்னை தோப்பில் பள்ளியின் பஸ் டயர்கள் போட்டு வைத்திருந்தனர்.

    டயர்கள் மற்றும் தேங்காய் கழிவுகளில் மழைநீர் தேங்கி அதில் டெங்கு கொசு உற்பத்தியாகியிருந்தன. அந்த பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    மேலும் அல்லிகுளத்தில் இயங்கி வரும் தனியார் சாக்லேட் கம்பெனியில் ஆய்வு செய்தார். அங்கு சாக்லேட் தயாரிப்புக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் டப்பாக்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் இருந்தன. இந்த நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.

    பின்னர் அல்லிகுளத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளி வாசலில் படித்து வரும் மாணவர்களிடம் கலெக்டர் நலம் விசாரித்தார். இதையடுத்து கலெக்டர் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். அல்லிகுளம் பகுதியில் துப்புரவு பணிகள் சுகாதார பணிகள் நடைபெறவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். * * * அம்மூர் தனியார் சாக்லேட் கம்பெனியில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பதை கலெக்டர் ராமன் கண்டு பிடித்த காட்சி. அருகில் சுகாதார துணை இயக்குனர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள்.

    Next Story
    ×