search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு பட்டியலில் விவசாயத்தை சேர்ப்பது ஆபத்தானது: ராமதாஸ் கண்டனம்
    X

    மத்திய அரசு பட்டியலில் விவசாயத்தை சேர்ப்பது ஆபத்தானது: ராமதாஸ் கண்டனம்

    வேளாண் துறையை மத்தியப் பட்டியலுக்கு மாற்றினால் விவசாயம் முற்றிலுமாக அழிந்து விடும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கோ, பொதுப் பட்டியலுக்கோ மாற்ற வேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ்சந்த் கூறியிருக்கிறார். மாநில உரிமைகளைப் பறிக்கும் நோக்கம் கொண்ட இப்பரிந்துரை கண்டிக்கத்தக்கது.

    மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்படுவதால் விவசாயத்திற்கு ஏதேனும் நன்மை கிடைக்குமென்றால் அதை பட்டியல் மாற்றம் செய்வதில் தவறு இல்லை. மாறாக மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டால் விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும். விவசாயம் மாநிலப் பட்டியலில் இருந்தாலும் கூட, விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு தான் நிர்ணயிக்கிறது. அத்துடன் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 50 ரூபாயும், ஒரு டன் கரும்புக்கு ரூபாயும் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு வகை செய்கிறது. ஆனால், இந்த ஊக்கத் தொகையை உழவர்களுக்கு வழங்கக் கூடாது என்று மத்திய அரசு தடுக்கிறது.

    விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்றினால் விவசாயம் முற்றிலுமாக அழிந்து விடும். வேளாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஏராளமான ஒப்பந்தங்களை உலக வர்த்தக அமைப்புடன் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. அவற்றையும், மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிடவும் மாநில அரசுகள் தடையாக இருப்பதால் தான் விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு துடிக்கிறது. அதற்கான கருவியாக நிதி ஆயோக்கை பயன்படுத்திக் கொள்கிறது.

    விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அத்துடன் நிதி ஆயோக் அமைப்பையும் மத்திய அரசு கலைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×