search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசு உற்பத்திக்கு காரணம்: குடியிருப்பு கட்டிட உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
    X

    டெங்கு கொசு உற்பத்திக்கு காரணம்: குடியிருப்பு கட்டிட உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

    டெங்கு கொசு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட உரிமையாளருக்கு ஒரு லட்சம் ரூபாயை அபராதமாக விதிக்கப்பட்டது.

    பெரம்பூர்:

    சென்னையில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானவர்களுக்கும், குப்பைகளை அகற்றாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனி மெயின்ரோட்டில் நடராஜன் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார். கடந்த வாரம் இங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் தேங்கி இருந்ததால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தேங்கிய மழைநீரை அகற்றவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து இன்று காலை சென்னை கலெக்டர் அன்புசெல்வன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

    மழைநீரை அகற்றாததால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிய உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் கட்டிட பணிக்கு தடையும் விதிக்கப்பட்டது

    Next Story
    ×