search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை: பொதுமக்கள் பீதி
    X

    கோவை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை: பொதுமக்கள் பீதி

    சின்ன தடாகம் பகுதியில் நள்ளிரவு 11 மணியளவில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை அருகே உள்ள சின்ன தடாகம் பகுதியில் நள்ளிரவு 11 மணியளவில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது.

    உணவு தேடி வந்த இந்த காட்டு யானை சின்ன தடாகம் ஊருக்குள் வீதி, வீதியாக சுற்றி திரிந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் தீப்பந்தம் ஏற்றி காட்டு யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் முடியவில்லை. ஒரு வீதியில் இருந்து விரட்டினால் மறு வீதிக்கு யானை சென்று வந்தது.

    இன்று அதிகாலை 4 மணி வரை பொதுமக்கள் போராடினார்கள். அதன் பின்னர் காட்டு யானை அங்குள்ள செங்கல் சூளைக்கு சென்று அங்கிருந்த பனை மட்டை ஓலைகளை தின்று விட்டு அதிகாலை அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை பகுதிக்கு சென்றது.

    அதன் பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். நேற்று கோவை அடுத்துள்ள வீரபாண்டி புதூரில் செங்கள் சூளைக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. அதே யானை தான் இன்றும் ஊருக்குள் புகுந்துள்ளது.

    அடிக்கடி யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும், இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×