search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலவேம்பு கசாய பிரச்சினை: கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
    X

    நிலவேம்பு கசாய பிரச்சினை: கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

    நிலவேம்பு கசாயம் குறித்து கமல் தெரிவித்த கருத்துக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்து கொண்டே இருக்கின்றது.

    சென்னை, அக். 20-

    தமிழகம் முழுவதும் காய்ச்சலால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், டெங்கு காய்ச் சல் பாதிப்புக்குள்ளாகி பலரும் உயிரிழந்துள் ளனர்.

    காய்ச்சல் வராமல் தடுக் கவும், காய்ச்சல் பாதிப்புக் குள்ளானவர்களும் நில வேம்பு கசாயத்தை காய்ச்சி குடித்து வருகிறார்கள். 9 மூலிகைகள் அடங்கிய நிலவேம்பு கசாயத்தை குடிப்பதால் பக்க விளைவு கள் ஏற்படாது என்று சித்த மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய அருமருந்து இது என்றும் கூறி வருகிறார்கள்.

    காய்ச்சலை கட்டுப்படுத்த வும், காய்ச்சல் பாதித்தவர் களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக் கவும், நிலவேம்பு கசாயம் குடிக்கலாம் எனவும் அறி வுறுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசே நிலவேம்பு கசாயத்தை பொது மக்க ளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. தனியார் அமைப்பு களை சேர்ந்தவர்களும் இதனை போட்டி போட்டு பொது மக்களுக்கு வழங்கி வரு கிறார்கள்.

    இந்த நிலையில் நிலவேம்பு கசாயம் குறித்து கமல் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. எப்போதுமே தான் சொல்ல வேண்டிய வி‌ஷயத்தை டுவிட்டரில் பதிவு செய்வதே கமலின் வாடிக்கை.

    நிலவேம்பு கசாயம் குறித்த தனது கருத்துக்களையும் டுவிட்டரிலேயே பதிவிட்டி ருந்தார். சரியான ஆராய்ச்சி முடிவு கள் கிடைக்கும் வரை தனது ரசிகர்கள் நிலவேம்பு கசா யத்தை வினியோகிக்க வேண்டாம் என்றும், நில வேம்பு கசாயம் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற ரீதியிலும் கமலின் கருத்துக்கள் இருந்தன.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் நிலவேம்பு கசாயம் குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரித் திருந்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள் ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், நிலவேம்பு கசாயம் குறித்து பேசுவதற்கு கமல் மருத்து வரோ, விஞ்ஞானியோ இல்லை, நிலவேம்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத் தாமல் பீதியை ஏற்படுத்தக் கூடாது என்று தெரிவித் துள்ளார்.

    பொன்.ராதாகிருஷ்ணன்

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் எம்.பி. ஆகியோரும் கமலின் கருத் துக்கு கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.

    சித்த மருத்துவர்களும் கமலின் கருத்தை மறுத்துள் ளனர். நிலவேம்பு கசாயத் துக்கு எதிராக தேவையில் லாமல் வதந்தியும் பீதியும் பரப்பப்படுகிறது. மலட்டுத் தன்மை ஏற்படும் என்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ள னர்.

    இதையடுத்து நிலவேம்பு கசாயத்துக்கு எதிராக நான் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறி கமல் திடீரென பதுங்கி உள்ளார். இதற்கு விளக்கம் அளித்து கமல் வெளியிட்டுள்ள இன் னொரு டுவிட்டர் பதிவில் ‘‘நிலவேம்புக்கு எதிராக கமல் கருத்து’’ என்று செய்தி பரப்புவது நியாயம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    சர்ச்சைக்குள்ளாகி இருக் கும் மருந்தை அளவில் லாமல் குடித்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த பதிவை போட்டேன் என்றும், மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் நிலவேம்பு கசாயத்தை வினியோகிப் பதை மட்டுமே நான் எதிர்க் கிறேன் என்றும் கமல் கூறி யுள்ளார். இருப்பினும் கமலுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

    இதற்கிடையே நிலவேம்பு கசாயம் தொடர்பாக பீதியை ஏற்படுத்திய கமலை கைது செய்ய வேண்டும் என்று போலீசிலும் புகார் அளிக் கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலு வலகத்தில் தேவராஜ் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார்.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் விசார ணைக்கு கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட் டுள்ளார். டுவிட்டர் வலை தளம் மூலமாக கமல் கருத்து தெரிவித்திருப்பதாலேயே சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    இதனை தொடர்ந்து கமல் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கமலின் டுவிட்டர் பதிவில் உள்ள கருத்துக்களை ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னரே இந்த விவ காரத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×