search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே ஜாமீனில் வெளிவந்த வாலிபர் கொலை
    X

    கோவை அருகே ஜாமீனில் வெளிவந்த வாலிபர் கொலை

    கோவை அருகே ஜாமீனில் வெளிவந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது23).

    இவர் மீது ரத்தினபுரி, சரவணம்பட்டி, துடியலூர் போலீஸ் நிலையங்களில் திருட்டு, அடிதடி, கஞ்சா வழக்குகள் உள்ளது.

    கடந்த 1 மாதத்துக்கு முன்பு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். 10 நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இவர் கோவை ஜே.எம்.2 கோர்ட்டில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.

    நேற்று நள்ளிரவில் இவர் வெள்ளக்கிணறு-கணபதி ரோட்டில் அஞ்சுகம் நகரில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. சீனிவாசலு, இன்ஸ்பெக்டர் வெற்றி வேந்தன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

    சீனிவாசன் உடலின் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. கழுத்து அரிவாளால் வெட்டப்பட் டிருந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    சீனிவாசன் கடந்த 4 நாட்களாக கோர்ட்டில் கையெழுத்திட செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே அடிதடி வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் சீனிவாசன் மீது உள்ள வழக்குகளின் விவரம், அதில் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சீனிவாசனுக்கு கஞ்சா பழக்கமும் இருந்துள்ளது. இவருடன் அதேபகுதியை சேர்ந்த 2 பேர் சேர்ந்து சுற்றி வந்துள்ளனர். எனவே கஞ்சா போதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததா? என்றும் போலீசார் சந்தேகித்தனர்.

    இதையடுத்து சீனிவாசனுடன் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்தவர்களின் பட்டியல் சேகரித்து விசாரணை நடந்து வருகிறது.

    கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×