search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.20 லட்சம் மதிப்பில் சாத்தனூர் கல்மர பூங்கா பராமரிக்கப்படும்: கலெக்டர் தகவல்
    X

    ரூ.20 லட்சம் மதிப்பில் சாத்தனூர் கல்மர பூங்கா பராமரிக்கப்படும்: கலெக்டர் தகவல்

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.20 லட்சம் மதிப்பில் சாத்தனூர் கல்மர பூங்கா பராமரிக்கப்படும் என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் வரலாற்றுச்சிறப்பு மிக்க இடமாக திகழ்வது ஆலத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் கல்மரமாகும். இந்த கல்மரம் அமைந்துள்ள பகுதியில் அரசின்சார்பாக சுற்றுலா மாளிகையும், அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த 10-ந் தேதி மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது:

    ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட சாத்தனூர் பகுதியில் உள்ள கல்மர பூங்காவிற்கு வருகை தரும், சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்கும் வகையில் தேவையான அடிப்படை வசதிகளுடன் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் "அம்மா பூங்கா''  அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படை க்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

    சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மரமாக அடித்துவரப்பட்டு தற்போது கல்லாக உருமாறியுள்ள 18 மீட்டர் நீளமுள்ள கல்மரத்தை பார்வையிட்டு, அதன்  தொன்மை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.  மேலும், அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும்  டைனோசர் முட்டை வடிவிலான கற்கள், கல்நத்தை வடிவிலான கற்கள் உள்ளிட்ட தொன்மையான பொருட்களை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் அவற்றை அருங்காட்சிய கத்திலர் வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    வரலாற்றுச் சிறப்பு மிக்க சாத்தனூர் கல்மரப் பூங்காவினை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பய ணிகள் அதிகளவில் வந்து பார்த்து செல்லும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×