search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு
    X

    எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு

    எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அட்டவணையை அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கையாக அனுப்பி வைத்துள்ளார்.
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இக்கால அட்டவணையை அனைத்து வகை பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்திட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    டிசம்பர் 11-ந்தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்

    டிசம்பர் 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்

    டிசம்பர் 14-ந்தேதி (வியாழக்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்

    டிசம்பர் 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்

    டிசம்பர் 18-ந்தேதி (திங்கட்கிழமை) - கணிதம்

    டிசம்பர் 20-ந்தேதி (புதன்கிழமை) - அறிவியல்

    டிசம்பர் 21-ந்தேதி (வியாழக்கிழமை) - விருப்பப்பாடம்

    டிசம்பர் 23-ந்தேதி (சனிக்கிழமை) - சமூக அறிவியல்

    டிசம்பர் 7-ந்தேதி (வியாழக்கிழமை) - தமிழ் முதல் தாள்

    டிசம்பர் 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்

    டிசம்பர் 11-ந்தேதி (திங்கட்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்

    டிசம்பர் 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்

    டிசம்பர் 14-ந்தேதி (வியாழக்கிழமை) - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்

    டிசம்பர் 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவு சீர்திருத்தம், ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, வேளாண்மை நடைமுறைகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழில்முறை)

    டிசம்பர் 18-ந்தேதி (திங்கட்கிழமை) - கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், நெறிமுறைகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி (தமிழ்), புள்ளியியல்

    டிசம்பர் 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - பயாலஜி, தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஜெனரல் மெசினிஸ்ட்-1, மின் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்-1, மேலாண்மை கொள்கைகள் மற்றும் நுட்பங்கள்,

    டிசம்பர் 21-ந்தேதி (வியாழக்கிழமை) - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெசினிஸ்ட்-2, மின்னணு உபகரணங்கள், சிவில் வரைவாளர், மின் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்-2, ஆட்டோ மெக்கானிக், ஆடை தொழில்நுட்பம்

    டிசம்பர் 23-ந்தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்குபதிவியல், தொழில்முறை கணக்கு பதிவியல்.

    எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 10 மணியில் தொடங்கி முதல் 10 நிமிடங்கள் கேள்வித்தாளை படிக்க வழங்கப்படுகிறது. அதன்பிறகு 5 நிமிடங்கள் விடைத்தாளில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்வதற்கு வழங்கப்படுகிறது. தேர்வு காலை 10.15 மணியில் தொடங்கி பிற்பகல் 12.45 மணிக்கு முடிவடைகிறது.

    டிசம்பர் 7-ந்தேதி (வியாழக்கிழமை) - தமிழ் முதல் தாள்

    டிசம்பர் 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்

    டிசம்பர் 11-ந்தேதி (திங்கட்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்

    டிசம்பர் 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்

    டிசம்பர் 14-ந்தேதி (வியாழக்கிழமை) - கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், இந்திய வரலாறு, கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு பாடம் (தமிழ்), புள்ளியியல்

    டிசம்பர் 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - பயாலஜி, தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், கணக்கு பதிவியல் மற்றும் ஆடிட்டிங் பயிற்சி-1

    டிசம்பர் 18-ந்தேதி (திங்கட்கிழமை) - கணிதவியல், மைக்ரோ பயாலஜி, விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு சீர்திருத்தம், உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, ஆடை தொழில்நுட்பம், வேளாண்மை நடைமுறைகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழில்முறை), கணக்கு பதிவியல் மற்றும் ஆடிட்டிங் (கோட்பாடு),

    டிசம்பர் 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்

    டிசம்பர் 21-ந்தேதி (வியாழக்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், கணக்கு பதிவியல் மற்றும் ஆடிட்டிங் பயிற்சி-2

    டிசம்பர் 23-ந்தேதி (சனிக்கிழமை) - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெசினிஸ்ட், மின்னணு உபகரணங்கள், சிவில் வரைவாளர், மின் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ மெக்கானிக், ஆடை தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை.

    பிளஸ்-2 அரையாண்டு தேர்வு காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. 10 மணியில் தொடங்கி முதல் 10 நிமிடங்கள் கேள்வித்தாளை படிக்க வழங்கப்படுகிறது. அதன்பிறகு 5 நிமிடங்கள் விடைத்தாளில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்வதற்கு வழங்கப்படுகிறது. தேர்வு காலை 10.15 மணியில் தொடங்கி பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது.
    Next Story
    ×