search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்
    X

    வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்

    பெரம்பலூரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாமை கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    பெரம்பலூர்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1.1.2018 அன்று தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி அடைந்துள்ள (31.12.1999-க்கு முன்னர் பிறந்தவர்கள்) நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளவும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

    அதன்படி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, துறைமங்கலம் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளி மற்றும் சிறுவாச்சூர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து கலெக்டர் தெரிவித்ததாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 322 வாக்குச்சாவடிகளில் 1,37,890 ஆண் வாக்காளர்களும், 1,44,959 பெண் வாக்காளர்களும், 13 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,82,862 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல், குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 316 வாக்குச்சாவடிகளில் 1,28,791 ஆண் வாக்காளர்களும், 1,30,882 பெண் வாக்காளர்களும், 10 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,59,683 வாக்காளர்கள் உள்ளனர்.

    மேலும் 1.1.2018 அன்று தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி அடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகள் 3.10.2017 முதல் 31.10.2017 வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற்று வருகின்றது. மேலும், இன்று (அதாவது நேற்று) மற்றும் 22.10.2017 ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு பயன் பெறலாம்.
    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், நகராட்சி ஆணையர் முரளி, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×