search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் டெங்கு பாதித்த மேலும் 7 பேருக்கு தீவிர சிகிச்சை
    X

    நெல்லை மாவட்டத்தில் டெங்கு பாதித்த மேலும் 7 பேருக்கு தீவிர சிகிச்சை

    நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் காரணமாக வந்த சுமார் 38 பேரில் 7 பேருக்கு டெங்கு இருப்பது ரத்த பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு பிரத்யேக வார்டில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை சுமார் 12 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    நெல்லை அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் கூடிய 3 தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. தினமும் காய்ச்சல் காரணமாக வரும் நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தனியாக டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டு உள்ளார்கள்.

    நேற்று மாலைவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் காரணமாக சுமார் 38 பேர் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களில் 7 பேருக்கு டெங்கு இருப்பது ரத்தப்பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு பிரத்யேக வார்டில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சுமார் 2200 பணியாளர்கள் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் வீடுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×