search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் விடிய,விடிய மழை: லண்டன், அபுதாபி விமானங்கள் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன
    X

    சென்னையில் விடிய,விடிய மழை: லண்டன், அபுதாபி விமானங்கள் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன

    பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்த லண்டன், அபுதாபி விமானங்கள் இங்கு தரையிறங்க முடியாமல் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.
    சென்னை:

    சென்னை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்றிரவு இடி- மின்னலுடன் பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழை விடிய விடிய பெய்ததுடன் காலையிலும் மழை தூறல் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

    அம்பத்தூர் பால்பண்ணை, கருக்கு, மேனாம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், கோயம்பேடு, மந்தைவெளி, மாதவரம், சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்பட பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

    நேற்றிரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் 49 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மீனம்பாக்கத்தில் 25.3 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்வதாகவும், இன்றும் இந்த மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

    விடிய விடிய பெய்த மழையின் காரணமாக சென்னை விமான நிலைய ஓடு பாதையிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரை இறங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

    லண்டன், அபுதாபி விமானங்கள் இங்கு தரையிறங்க முடியாமல் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.

    குவைத், சார்ஜா, கொழும்பு, அந்தமான், மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்களும் தரையிறங்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்களும் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன.
    Next Story
    ×