search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியில் தண்ணீர் திறக்க கோரி அரசு அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
    X

    காவிரியில் தண்ணீர் திறக்க கோரி அரசு அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

    காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி தஞ்சையில் விவசாயிகள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் கடந்த 6 வருடமாக சம்பா சாகுபடி நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் டெல்டாவில் ஒரு சில இடங்களில் தற்போது சம்பா நாற்று நடும் பணி தொடங்கி உள்ளது. பம்பு செட் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது மேட்டூர் அணையில் 84 அடிதண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனை வலியுறுத்தியும், விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரியும் தஞ்சையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சாமி. நடராஜன் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர்கள் காமராஜ், ராஜமாணிக்கம், கோவிந்தராஜ், துணை செயலாளர் முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முற்றுகையில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். 2 பெண்கள் உள்பட 41 பேர் கைது செய்யயப்பட்டனர்.
    Next Story
    ×