search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி எல்லையில் 27 சொகுசு கார்களை திருடிய 3 பேர் கைது
    X

    நீலகிரி எல்லையில் 27 சொகுசு கார்களை திருடிய 3 பேர் கைது

    நீலகிரி எல்லையில் சாலைஓரங்களில் நிறுத்தப்பட்ட 27 நவீன சொகுசு கார்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது கேரள எல்லையான நீலம்பூர். இந்த பகுதியில் சாலைஓரங்களில் நிறுத்தப்பட்ட நவீன சொகுசு கார்கள் அடிக்கடி திருட்டுபோனது. இதுதவிர வாடகைக்கு கார் எடுக்கும் கார்களும் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து நீலம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பினுதாமசிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர தேடுதல் மற்றும் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் அனிஸ் (வயது 27). இவர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஏஜெண்டாகவும், டிரைவிங் ஸ்கூல் உரிமையாளராகவும் உள்ளார். இவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மற்ற போலீசாருடன் அனிசை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அனிஸ் கார்களை திருடியதை ஒப்புக்கொண்டார். கார் திருட்டுக்கு உதவியாக இதே பகுதியை சேர்ந்த இஸ்வாலிஸ் (24), அய்யார் (25) ஆகியோர் இருந்தையும் ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் திருடிய கார்கள் எங்கே உள்ளன என்று கேட்டனர். திருடப்பட்ட 27 சொகுசு கார்கள் நீலம்பூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளதாக கூறினார்.

    இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் 27 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×