search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகளில் யோகா வகுப்பு கட்டாயம் என்பதை திரும்பப்பெற வேண்டும்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை
    X

    பள்ளிகளில் யோகா வகுப்பு கட்டாயம் என்பதை திரும்பப்பெற வேண்டும்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

    தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் யோகா வகுப்பு கட்டாயம் என்பதை திரும்பப்பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    சென்னை:

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் யோகா வகுப்பு கட்டாயம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதை ஏற்க முடியாது. உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என் எதிர்க்கட்சிகள் பலவும் எச்சரித்திருக்கின்றன, கண்டித்திருக்கின்றன. தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இது, ‘பிஞ்சு நெஞ்சில் நஞ்சினைப் பாய்ச்சுவதாகும்’ என்பதோடு, இந்த உத்தரவை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.

    ஓடி, ஆடி விளையாடுவதில் தான் பள்ளிச் சிறாரின் உள்ளமும், உடலும் உரம் பெறும். சுயமாகச் சிந்தித்து செயல்படும். யோகா மூலம் அவர்களை ஓரிடத்தில் வைத்து ஒடுக்குதல் செய்தால் அது பிஞ்சு நெஞ்சில் நஞ்சினையே பாய்ச்சுவதாகும். கொஞ்சமும் யோசிக்கலாமா இப்படி யோகா வகுப்பினை பள்ளிகளில் நடத்த உத்தரவிட்டார் முதல்-அமைச்சர் பழனிசாமி?.

    தேவையற்ற இந்த உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×