search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டையில் நீட் தேர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
    X

    முத்துப்பேட்டையில் நீட் தேர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    முத்துப்பேட்டையில் நீட்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் நீட்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், ஏழை மாணவி அனிதாவின் மரணத்திற்கு பொறுப் பேற்று மத்திய, மாநில அரசுகள் பதவி விலகிட கோரியும் பேரூராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    காங்கிரஸ் மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் சேக்பரீத் தலைமை வகித்தார். மூத்த காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே.என்.முகமது மைதீன், வட்டார தலைவர் பாலகிருஷ்ணன், நகர தலைவர் கி.மு.ஜெகபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ், தி.மு.க. தலைமை கழக பேச்சாளரும், செய்தி தொடர்பு மாநில இணை செயலாளருமான தமிழன்.பிரசன்னா திருத்துறைப்பூண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆடலரசன் ஆகியோர் பேசினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்எஸ்பாக்கர் அலி சாஹீப், காங்கிரஸ், திமுக மாவட்ட துணைச்செயலாளர் எம்.எஸ்.கார்த்திக், மக்கள் ஊழல் தடுப்பு இயக்கம் மாநில தலைவர் கவிஞர் பசீர் அகமது, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜீதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.த.செல்வம், மாவட்ட பொருளாளர் வெற்றி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் முகைதீன் உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்த பல கலந்துக்கொண்டனர்.

    முடிவில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சுந்தரராமன் நன்றி கூறினார்.

    Next Story
    ×