search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள்: 5 பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்; 10 பெண்களுக்கு தையல் எந்திரம்
    X

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள்: 5 பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்; 10 பெண்களுக்கு தையல் எந்திரம்

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    சென்னை:

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் இந்திய நாடார்கள் கூட்டமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    முன்னாள் எம்.எல்.ஏ-வும், தூத்துக்குடி மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவருமான எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் வரவேற்றார்.

    விழாவில் 5 பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள், 10 பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன.

    திருச்செந்தூர் சிறு நாடார் குடியிருப்பு ஆர். எம்.வி. நடுநிலைப்பள்ளிக்கு தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் கம்ப்யூட்டரை வழங்கி நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். அதை பள்ளி சார்பில் முத்துலிங்கம் பெற்றுக் கொண்டார்.

    பெரம்பூர் திரு.வி.க. நகர் பொன்னுசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருமான வரி அதிகாரி மகாலிங்கம் கம்ப்யூட்டரை வழங்க அதை பள்ளி தாளாளர் துரைசாமி பெற்றுக் கொண்டார்.

    தண்டையார்பேட்டை வினோபா நகர் விவேகானந்தா இலவச கணினி மையத்துக்கு அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. கம்ப்யூட்டர் வழங்க அதை ஆசிரியை சாந்தா பெற்றுக் கொண்டார்.


    காயாமொழி சி.பா.ஆதித்தனார் அரசு மேல் நிலைப்பள்ளிக்கான கம்ப்யூட்டரை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்க முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் பெற்றுக் கொண்டார்.

    திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் கம்ப்யூட்டரை வழங்க அதை மனாசே பெற்றுக் கொண்டார்.

    பிரியா, முருகேஸ்வரி, செந்தில்மாரி, ஆலந்தூர் பவானி, ரியானா, அம்பத்தூர் கஸ்தூரி, தண்டையார்பேட்டை சாந்தி, முகப்பேர் மேற்கு மகேஸ்வரி, எம்.ஜி.ஆர். நகர் வெண்ணிலா, சிறுநாடார் குடியிருப்பு மாற்றுத் திறனாளி குமரேசன் ஆகிய 10 பேருக்கு தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன.

    இவற்றை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன், ஆலந்தூர் வட்டார நாடார் சங்க தலைவர் கணேசன் நாடார், இந்திய நாடார் கூட்டமைப்பு துணைத் தலைவர் பி.ராஜ்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.

    ஜேப்பியார் என்ஜினீயரிங் கல்லூரி கைப்பந்து கழக மாணவிகள் உட்கர்ஜா தலைமையில் வந்து மரியாதை செலுத்தினார்கள்.

    கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி கைப்பந்து கழக வீரர்கள் ஸ்ரீதர், சரவணன் தலைமையில் மரியாதை செலுத்தினர்.

    கைலி கொஜூரியூ கராத்தே அகாடமி வீரர்கள் ரேணு கோபால் தலைமையில் 30 பேர் மரியாதை செலுத்தினார்கள். கராத்தே வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும், சிலம்பாட்ட நிகழ்ச்சிகளும் நிகழ்த்தி காட்டப்பட்டது.
    Next Story
    ×