search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கான திறனாய்வு போட்டிகள் 26-ந்தேதி நடக்கிறது
    X

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கான திறனாய்வு போட்டிகள் 26-ந்தேதி நடக்கிறது

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் தொழில்திறனை வெளிக்காட்டுவதற்கான திறனாய்வு போட்டிகள் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் தொழில்திறனை வெளிக்காட்டுவதற்கான திறனாய்வு போட்டிகள் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கீழக் கணவாயில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் எந்திர வியல் (மெக்கானிக்கல்), மின் னியல் மற்றும் மின்னணுவியல் (எலக்ட்ரிக்கல், எலக்ட் ரானிக்ஸ்) மற்றும் தகவல் தொழில்நுட்பம் (எலக்ட் ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேசன்) ஆகிய துறைகளில் திறனாய்வு போட்டிகள் நடைபெற உள்ளன.

    இப்போட்டிகளில் பொறியியல் கல்லூரிகள், பொறியியல் பல் தொழில் நுட்ப கல்லூரிகள் (பாலிடெக்னிக்) கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றோர் தொழிற்சாலைகளில் தொழிற் பழகுநர்களாய் பணிபுரிவோர் (அப்ரண்டிஸ்), தொழிற் சாலைகளில் பணிபுரிவோர் குறுகிய கால பயிற்சி மூலம் திறன் பெற்றோர், அமைப்பு சாரா தொழில்களில் பணி அனுபவம் பெற்றோர் இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.

    மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோர் மாநிலஅளவில் சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு மாவட்ட கலெக்டரால் பரிந்துரைக்கப்படுவர். மேலும் விவரங்கள் மற்றும் போட்டியில் பங்கேற்பதற்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் உதயசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×