search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெற்றோர் நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டும்: நீதிபதி புகழேந்தி
    X

    பெற்றோர் நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டும்: நீதிபதி புகழேந்தி

    பெற்றோர் நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டும் என்று செம்மொழி தமிழ் சங்க விழாவில் நீதிபதி புகழேந்தி பேசினார்.

    சென்னை:

    உலக செம்மொழி தமிழ் சங்கம், தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு கலை மன்றம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன், பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் பிறந்த நாளையொட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டிராபிக் ராமசாமி தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் கே.ஜம்புலிங்கம் முன்னிலை வகித்தார். முனைவர் மு.ஜப்பார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

    விழாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான முறையில் மக்களுக்கு சமூக சேவை செய்து வரும் நலா மேரஜ் கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் வி.பி.சிவகுமார் உள்ளிட்ட பல்துறை சாதனையாளர்களுக்கு முனைவர் பட்டம் மற்றும் விருதுகளை நீதிபதி புகழேந்தி வழங்கி பேசினார்.அவர் பேசியதாவது:-

    மனிதர்கள் பெரும் பாலோரிடம் காணப்படும் பேராசையே பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம். குழந்தைகளுக்கு பெற்றோர் நல்ல பழக்கத்தை சொல்லி தரவேண்டும். சிறந்த குடிமக்கள் மூலமாகவே சிறந்த சமுதாயத்தையும் வலிமையான நாட்டையும் உருவாக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்வரன்சிங், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான், ஸ்ரீராமஜெயம் கல்விக்குழுமத் தலைவர் சி.ஏழுமலை, தமிழர் சேனை தலைவர் மு.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×