search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று தீபா ஆறுதல் - நிதி உதவி
    X

    தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று தீபா ஆறுதல் - நிதி உதவி

    நீட் தேர்வால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் வீட்டிற்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது வீட்டுக்கு நேற்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா நேரில் சென்றார். அனிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் மெத்தன போக்கால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த மரணம் நிகழ்ந்து இருந்திருக்காது.

    அனிதாவின் மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.கல்வியை மாநில உரிமை பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். வருங்கால மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

    தற்போது தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழக ஆட்சியாளர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது.

    சட்டப்பேரவைத் தேர்தல் வரக்கூடிய பட்சத்தில் 234 தொகுதியிலும் எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்போம். உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கட்சி போட்டியிடும் என்றார்.
    Next Story
    ×