search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் மட்டை தாக்கியதில் உயிரிழப்பு: மாணவர் மரணத்தில் விசாரணை தேவை - ஜி.கே.வாசன்
    X

    கிரிக்கெட் மட்டை தாக்கியதில் உயிரிழப்பு: மாணவர் மரணத்தில் விசாரணை தேவை - ஜி.கே.வாசன்

    கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆசிரியர் கையில் இருந்த கிரிக்கெட் மட்டை நழுவி தாக்கியதில், நாமக்கல் மாவட்டம் விட்டம்பாளையம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் விக்னேஸ்வரன் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. வேதனைக்குரியது.

    உயிரிழந்த மாணவர் விக்னேஸ்வரன் குடும்பத்துக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். பள்ளி பருவத்தில் பல்வேறு கனவுகளுடன் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் ஒரு போதும் நிகழக் கூடாது.

    இச்சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகத்தை போக்குவதற்கு விசாரணை நடத்தி உண்மை காரணத்தை வெளிப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×