search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் தீயணைப்புத்துறை சார்பில் மழைக்காலத்தில் மீட்பு பணி மேற்கொள்வது குறித்த ஒத்திகை
    X

    பெரம்பலூரில் தீயணைப்புத்துறை சார்பில் மழைக்காலத்தில் மீட்பு பணி மேற்கொள்வது குறித்த ஒத்திகை

    பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மழைக்காலத்தில் மீட்பு பணியை மேற்கொள்வது குறித்த ஒத்திகை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைக்காலங்களில் வெள்ளம் போன்ற பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

    இதனை மாவட்ட கலெக்டர் சாந்தா பார்வையிட்டார். அப்போது நவீன உயர்கோபுர விளக்கை ஒளிர செய்து ரப்பர் படகின் மூலம் ஒரே நேரத்தில் 10 நபர்களை மீட்டு கொண்டு வருதல், மீட்பு பணியின் போது இரும்பு கம்பி உள்ளிட்டவற்றை நவீன ஹைட்ராலிக் கட்டர் கருவி மூலம் வெட்டி எடுத்தல், பேரிடரின் போது அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கிக் கொண்டவர்களை ராட்சத அலுமினிய ஏணி உதவியுடன் மீட்பது மற்றும் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை தேடி கண்டுபிடிப்பது, ஆடு, மாடு உள்ளிட்ட விலங்கினங்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டால் வலை மூலம் அதனை மீட்டு கொண்டு வருதல் என்பன உள்ளிட்ட பல்வேறு மீட்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் தீயணைப்பு படைவீரர்கள் நேரடியாக செயல் விளக்கம் அளித்தனர்.

    இதை தவிர வீடுகளில் சமையல் செய்யும் பொழுது ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது குறித்தும் மக்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பால்ராஜ், சதாசிவம் (போக்குவரத்து) உள்ளிட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×