search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரட்டூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    கொரட்டூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    கொரட்டூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    வில்லிவாக்கம்:

    கொராட்டூரில் உள்ள பக்தவச்சலம் கல்லூரி அருகே இந்தியன் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று இரவு அப்பகுதியில் கொரட்டூர் போலீஸ் நிலைய தலைமை காவலர் மோகன் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

    அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்து அலாரம் ஒலித்தது. சந்தேகமடைந்த போலீஸ்காரர் மோகன் ஏ.டி.எம். அருகே சென்றார்.

    உடனே அங்கிருந்த 5 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 2 பேரை மடக்கி பிடித்தார்.

    விசாரணையில் பிடிபட்ட இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் குமார், அனில் குமார் என்பதும், தப்பி ஓடியவர் அவர்களது கூட்டாளி என்பதும் தெரிந்தது.

    ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரம் உடைந்து காணப்பட்டது. அருகே சுத்தியல் மற்றும் டிரிலிங் எந்திரம் கிடந்தன. ஏ.டி.எம். எந்திரத்தை அவர்கள் உடைக்க முயற்சி செய்த போது ரோந்து போலீஸ்காரரிடம் சிக்கி விட்டனர். இதனால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

    கைதான சந்தோஷ்குமார் மண்ணடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவன் வேலை தேடி வந்த நண்பர் அனில் குமாருடன் சேர்ந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இருவருக்கும் வேறு எந்த கொள்ளையிலும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×