search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை
    X

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை

    சேலத்தில் 30-ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் செல்கிறார்.

    சேலம்:

    நாமக்கல்லில் வருகிற 17-ந் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    அதற்காக நாளை (16-ந் தேதி) மாலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் அவர் அங்கிருந்து காரில் சேலத்திற்கு இரவு 10 மணியளவில் வருகிறார். இரவில் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்குகிறார்.

    சேலத்தில் 30-ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பாக 17-ந் தேதி காலை சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து நூற்றாண்டு விழா நடைபெறும் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தை அவர் பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது.

    பின்னர் சேலத்தில் நடைபெறும் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    17 -ந் தேதி மாலை 4 மணியளவில் சேலத்தில் இருந்து நாமக்கல் செல்லும் அவர் அங்கு நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். விழா முடிந்ததும் மீண்டும் சேலத்திற்கு வரும் அவர் இரவில் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்குகிறார். பின்னர் மறுநாள் காலை காரில் கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு செல்கிறார்.

    இதையொட்டி சேலம் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×