search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை: நீர் மின்நிலையங்களில் 900 மெகாவாட் மின்னுற்பத்தி
    X

    நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை: நீர் மின்நிலையங்களில் 900 மெகாவாட் மின்னுற்பத்தி

    நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் கொண்டு நாள்தோறும் 900 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கனமழையால் மாவட்டத்தில் உள்ள ஏமரால்டு, அவலாஞ்சி, பைக்காரா, பி.கே.பஜார், காமராஜர் சாகர், அப்பர் பவானி உள்ளிட்ட 12 அணைகள் தனது முழு கொள்ளளவு எட்டும் நிலையில் உள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் வீணாகாமல் தடுக்க குந்தா நீர் மின் திட்டம், பைக்காரா நீர் மின் திட்டம் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதனால் நாள்தோறும் 900 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சாண்டிநல்லா மின்நிலையம் மூலம் சமவெளிபகுதிக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
    Next Story
    ×