search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடிய-விடிய போராட்டம்
    X

    சேலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடிய-விடிய போராட்டம்

    பழைய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
    சேலம்:

    பழைய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் தமிழகம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நாட்டாண்மை கட்டிடத்தில் பந்தல் அமைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    பின்னர் அங்கேயே சமைத்து சாப்பிட்ட அவர்கள் விடிய-விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை விளக்கி நிர்வாகிகள் பேசினர். இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

    2-வது நாளாக இன்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும், அதுவரை பணிக்கு செல்லமாட்டோம் என்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் உறுதியாக தெரிவித்தனர்.
    Next Story
    ×