search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை, திருப்பூர், நீலகிரியில் நீட் தேர்வை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    கோவை, திருப்பூர், நீலகிரியில் நீட் தேர்வை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முன்னாள் கொறடா முபாரக் தலைமையில் நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
    திருப்பூர்:


    நீட் தேர்வை தமிழகத்தில் நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும், அரியலூர் மாணவி அனிதா தற் கொலைக்கு நீதி கேட்டும் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன், புறநகர் மாவட்ட தலைவர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை கண்டித்தும், மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷமிட்டனர்.

    கோவையில் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கார்த்திக் எம்.எல்.ஏ., முத்துசாமி, ராமச்சந்திரன், தமிழ்மணி, மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, கண்ணப்பன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு,விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முன்னாள் கொறடா முபாரக் தலைமையில் நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×