search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனரா?: ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
    X

    நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனரா?: ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

    நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனரா என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேசிய நெடுஞ்சாலை எண். 67-ல் பெட்ட வாய்த்தலை முதல் குளித்தலை வரை சாலையின் இருபுறமும் மணல் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்குள்ள சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தி நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    எனவே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் லாரிகளை நிறுத்த அனுமதிக்க கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறையின் தலைமை பொது மேலாளர் ஆஜரானார்.

    அவரிடம் நீதிபதிகள், விதிமுறைகளை மீறுவதற்காக ரவுடிகள், சமூக விரோதிகள் சுங்கச் சாவடிகளில் பணி அமர்த்தப்பட்டு உள்ளனரா? அதுபோன்ற சுங்கச்சாவடிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

    பின்னர் நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
    Next Story
    ×