search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
    X

    அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    ஜாக்டோ - ஜியோ சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவில்பட்டி:

    புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மட்டும் பணிக்கு வந்தார். மற்ற ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பல்வேறு தேவைகளுக்காக தாலுகா அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதனை கண்டித்தும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இடைநீக்கம் செய்து விட்டு, புதிய ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தியும், பொதுமக்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் ராமகிருஷ்ணன், கிளை செயலாளர் ராஜையா, ராமையா, ஐ.என்.டி.யு.சி. தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், எட்டயபுரம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
    Next Story
    ×