search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட்டை எதிர்த்து ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலாவின் உணர்வை மதிப்போம்: ஸ்டாலின்
    X

    நீட்டை எதிர்த்து ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலாவின் உணர்வை மதிப்போம்: ஸ்டாலின்

    நீட் தேர்வை எதிர்த்து ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலாவின் உணர்வை மதிப்போம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அரசியல் கட்சிகளை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி முதல் பள்ளி-கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றிய சபரிமாலா, தனது 7 வயது மகனுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இப்போராட்டத்துக்கு அரசு அனுமதியளிக்க மறுத்த காரணத்தினால் தன்னுடைய ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்தார்.

    ஆசிரியை சபரிமாலா ராஜினாமா செய்தது குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- "நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா: அவரது உணர்வை மதிப்போம். ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே!" என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×