search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி, அரியலூரில் பலத்த மழை - சாலைகளில் வெள்ளப்பெருக்கு
    X

    திருச்சி, அரியலூரில் பலத்த மழை - சாலைகளில் வெள்ளப்பெருக்கு

    திருச்சி- அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகர பகுதியில் நேற்று மதியம் வெயில் வாட்டி வதைத்தது. மாலை 6 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. இரவு 7-30 மணி வரை இதே நிலை நீடித்தது.

    பின்னர் லேசான மழை தூறல் விழுந்தது. இரவு 8 மணிக்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு வரை நீடித்தது. நள்ளிரவு வரை மழை தூறல் விழுந்து கொண்டே இருந்தது.

    இந்த மழையால் மேலப்புதூர் சுரங்க பாதை, மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், அய்யப்பன் கோவில், தில்லை நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.துறையூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கன மழைபெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அரியலூர் காய்கறி மார்க்கெட் அருகே உள்ள மாங்காய் பிள்ளையார் கோவில் சாலையிலும் அதன் பின்புறம் உள்ள காளியம்மன் கோவில் சாலையிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது.
    Next Story
    ×