search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி அனிதா தற்கொலை: மத்திய-மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல்- ஆர்ப்பாட்டம்
    X

    மாணவி அனிதா தற்கொலை: மத்திய-மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல்- ஆர்ப்பாட்டம்

    அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மதுரை:

    நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய- மாநில அரசுகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் நடந்து வருகின்றன.

    மதுரையில் நேற்று மாலை மாணவர்கள் அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 30 பேரை போலீசார் கைது செய்தனர். இன்றும் பல்வேறு இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள கட்ட பொம்மன் சிலை முன்பு மக்கள் அதிகாரம் மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி தலைமையில் சாலை மறியல் நடந்தது.

    இதில் பங்கேற்ற 5 பெண்கள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். ஆதிதமிழர் கட்சி சார்பில் மாணவியின் சாவுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கட்டபொம்மன் சிலை முன்பு சாலைமறியல் நடந்தது. மாநில நிதி செயலாளர் விடுதலை வீரன், மாநகர் மாவட்ட செயலாளர் சிதம்பரம், தெற்கு மாவட்ட செயலாளர் கணேசன், தலைவர் பால்பாண்டி, மகளிர் அணி செயலாளர் துர்கா, கொள்கை பரப்பு செயலாளர் நல்லுபாண்டி உள்பட 30 பேர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் எச்சரித்தும் மறியல் கைவிடப்படாததால் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலை முன்பு தமிழ்புலிகள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர் அழகுபாண்டி, பகுதி செயலாளர் பேரறி வாளன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை செல்லூர் எம்.எம்.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொது மக்கள் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×