search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செங்கோட்டில் நாளை மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டம்
    X

    திருச்செங்கோட்டில் நாளை மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டம்

    திருச்செங்கோடு பொதுக் கூட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அவரை வரவேற்கும் விதமாக திருச்செங்கோடு நகர,ஒன்றிய பகுதிகளில் கொடிக்கம்பம், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தலைவர் மு.கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழா பொதுக்கூட்டம் நாளை (31-ந்தேதி) மாலை 5 மணிக்கு திருச்செங்கோடு வாலரை கேட் கரட்டுபாளையத்தில் நடக்கிறது. இந்த பொதுக் கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

    முன்னதாக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி தலைமையில் பிரமாண்டமான உள் அரங்கத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    நாளை மாலை 5 மணிக்கு வாலரைகேட் கரட்டு பாளையத்தில் நடைபெற உள்ள பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழகம் மற்றும் மாவட்ட சார்பு அணிகள், இளைஞர் அணி, மாணவர் அணியை சேர்ந்த அனைத்து தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

    8 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் 20 ஆயிரம் பேர் நாற்காலியில் அமர்ந்து பார்க்க கூடிய வகையில் மின்னொளி மற்றும் மின் விசிறி வசதியுடன் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் பேர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    15 ஏக்கரில் 2 இடங்களில் வாகன பார்க்கிங் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் இந்த பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்திட நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க.வினர் செயலாற்றிட வேண்டும்.

    இவ்வாறு மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி பேசினார்.

    இக்கூட்டத்தில் திருச்செங்கோடு நகர செயலாளர் நடேசன், ஒன்றிய செயலாளர் தங்கவேல், அவை தலைவர் நடனசபாபதி, மாவட்ட துணை செயலாளர்கள் சேகர், சுகந்தி மணியம், எலச்சிப்பாளையம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராஜமாணிக்கம், சார்பு அணி அமைப்பாளர் மொளசி முத்துமணி, இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில், மாணவர் அணி அமைப்பாளர் ஜிஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×