search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே கார் மோதி தொழிலாளி சாவு: அ.தி.மு.க. பிரமுகர் கைது
    X

    ஊத்துக்கோட்டை அருகே கார் மோதி தொழிலாளி சாவு: அ.தி.மு.க. பிரமுகர் கைது

    ஊத்துக்கோட்டை அருகே ரோட்டின் ஓரமாக நின்று கொண்டிந்த தொழிலாளி மீது கார் மோதியது. இதில் அவர் உயிரிழந்தார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அம்பேத்கார் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 55) கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியில் ரோட்டின் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது பெரிய பாளையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி வந்த கார் திடீரென பழனி மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம்அடைந்த அவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனி பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் பழனி மீது மோதி நிற்காமல் சென்ற கார் டிரைவரை கைது செய்யக் கோரி பழனியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பரந்தாமன், சப் இன்ஸ்பெக்டர் மணி மனோகரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கார் டிரைவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே பழனி மீது மோதி நிற்காமல் சென்ற காரை ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகில் போலீசார் மடக்கி பிடித்தனர். காரை ஓட்டி வந்த வேலூர் மாவட்டம் காவேரிபாக்கம் அருகே உள்ள தர்ம நிதி கிராமத்தை சேர்ந்த அ.தி. மு.க. பிரமுகர் சரவணனை கைது செய்தனர்.

    அவர் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஊர் திரும்பும் போது விபத்து நடந்தது தெரியவந்தது.

    Next Story
    ×