search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பந்தக்கால் நாட்டப்பட்டது: 3 அமைச்சர்கள் பங்கேற்பு
    X

    ஊட்டியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பந்தக்கால் நாட்டப்பட்டது: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் பொதுகூட்டம் ஊட்டியில் வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

    ஊட்டி:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் பொதுகூட்டம் ஊட்டியில் வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

    தமிழக அரசு சார்பில் நடைபெறும் இந்த விழாவுக்கு ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை மற்றும் அரங்கு அமைக்கப்படுகிறது. இதற்கான பந்தக்கால் நடும் விழா இன்று காலை நடந்தது.

    விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டு பந்தகால் நட்டனர்.

    இதில் எம்.பி.க்கள் கே.ஆர்.அர்ச்சுனன், கோபால கிருஷ்ணன், ஏ.கே.செல்வராஜ், சாந்தி ராமு எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதைதொடர்ந்து ஊட்டி விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற போட்டிகள் குறித்தும், விழா ஏற்பாடுகள் குறித்தும் நலத்திட்ட உதவிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    Next Story
    ×