search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் கைகோர்ப்பு: கரூரில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
    X

    எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் கைகோர்ப்பு: கரூரில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

    எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இரு அணிகள் இணைந்ததால் கரூர் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் மாறி மாறி இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.
    கரூர்:

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டது.

    அ.தி.மு.க.வினர் பிரிந்ததால் இரட்டை இல்லை சின்னமும் முடக்கப்பட்டது. பின்னர் பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் இணைய சில நிபந்தனை களை விதித்தார். அதனை எடப்பாடி அரசு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து நேற்று இரு அணியினரும் இணைந்தனர்.

    இணைந்த கையுடன் ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், மாபா. பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    அணிகள் இணைந்தது அ.தி.மு.க. தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கரூரில் எடப்பாடி பழனிசாமி அணியினர் பட்டாசு இனிப்புடன் பஸ் நிலையத்தில் திரண்டனர். இதையடுத்து வடிவேல் தலைமையிலான ஓ. பன்னீர் செல்வம் அணியினர் அங்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை எடப்பாடி தரப்பினர் மகிழ்ச்சியுடன் சென்று வரவேற்றனர்.

    பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாறி மாறி இனிப்பு ஊட்டி கொண்டாடினர். பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கினர். வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.

    நிகழ்ச்சியில் எடப்பாடி தரப்பை சேர்ந்த அவை தலைவர் காளியப்பன், நகர செயலாளர் நெடுஞ்செழியன், எஸ்.பி.வீரப்பன், எம்.டி.என். மதன், கே.சாமிநாதன் மற் றும் கட்சியினர் பன்னீர் தரப்பை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கு. வடிவேல், காமராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், முன்னாள் தொகுதி செயலாளர் திருவிகா மற்றும் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×