search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் 5-வது நாளாக போராட்டம்
    X

    கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் 5-வது நாளாக போராட்டம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் நேற்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோட்டைப்பட்டினம்:

    கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கி இலாகா ஊழியராக்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து அதிகாரிகள் மிரட்டுவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ந் தேதி முதல் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 750 கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலை நிறுத்தம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 354 கிராமிய தபால் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் தபால் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மீமிசலில் உள்ள தபால் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் புதுக்கோட்டை கோட்ட தலைவர் அடைக்கலம் தலைமை தாங்கினார். இதில் வீரையா, மாரிமுத்து உள்பட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×