search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு: தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க ச.ம.க. கூட்டத்தில் தீர்மானம்
    X

    நீட் தேர்வு: தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க ச.ம.க. கூட்டத்தில் தீர்மானம்

    சமத்துவ மக்கள் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. இதில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கரூர்:

    சமத்துவ மக்கள் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் காமராஜபுரம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மயில்சாமி, நகர இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை செயலாளர் சத்தியராஜ், தான்தோன்றி ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, மாணவரணி துணை செயலாளர் சிவா, இனாம், கரூர் நகர செயலாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி, அமராவதி ஆற்றின் இணை வாய்க்கால்களை தூர்வார வேண்டும். உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்திட வேண்டும். கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×