search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: குண்டாறு அணைப்பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவு
    X

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: குண்டாறு அணைப்பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவு

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக குண்டாறு அணைப்பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவானது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழைகள் பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. அணைகளில் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. குளங்கள் வறண்டு காணப்படுகிறது. இந்த ஆண்டும் பருவ மழை சரிவர பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். கடும் வெயில் வாட்டுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே கடும் வெயில் அடித்தது. மதியம் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக குண்டாறு, அடவிநயினார் அணைப்பகுதியில் கனமழை பெய்தது. ஆய்க்குடி, செங்கோட்டை, பாளை பகுதியில் மிதமான மழை பெய்தது.

    பாபநாசம் அணைப் பகுதியிலும் லேசான மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 52 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 309 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 256 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 16.40 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 32.75 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 48.10 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 58.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 24.67 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 35.25 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 76.25 அடியாகவும் உள்ளன. அணைப்பகுதி மற்றும் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:

    குண்டாறு 15, தென்காசி 10.80, அடவிநயினார் 10, செங்கோட்டை 7, ராமநதி 6, பாபநாசம் 4, ஆய்க்குடி 4, பாளை 2, சங்கரன்கோவில் 1, நெல்லை 1.

    குற்றாலத்தில் போதிய மழை இல்லாததால் சீசன்களை இழந்து காணப்பட்டது. அருவிகளில் குறைவாகவே தண்ணீர் விழுந்தது. இந்த நிலையில் குற்றால மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து இன்று அதிகரித்தது.

    மெயினருவில் அதிகளவில் தண்ணீர் கொட்டியது. குளுகுளு கால நிலையுடன் சீசன் ரம்மியமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகமாக இருந்தது.
    Next Story
    ×