search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாட்ஜில் தங்கியிருந்த பெண் இன்ஸ்பெக்டர் கணவர் மர்ம பலி
    X

    லாட்ஜில் தங்கியிருந்த பெண் இன்ஸ்பெக்டர் கணவர் மர்ம பலி

    நாகர்கோவில் லாட்ஜில் தங்கியிருந்த பெண் இன்ஸ்பெக்டரின் கணவர் மர்மமான முறையில் பலியானது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த கோணம் எறும்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாண் சாந்தகுமார் (வயது 43). இவர் ஆன்லைனில் டிசைனிங் ஓர்க் செய்து வந்தார்.

    இவரது மனைவி தேவி. இவர் குமரி மாவட்ட சி.பி. சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

    இவர்களுக்கு தெரிஷ்மா (7) என்ற மகள் இருக்கிறார். தற்போது இவர்கள் நாகர்கோவில் ஆயுதப்படை மைதான சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

    நேற்று கோவில்பட்டியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் ஜாண் சாந்தகுமாரை பார்ப்பதற்காக நாகர்கோவிக்கு வந்திருந்தார். கோட்டாரில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த அந்த நண்பரை ஜாண் சாந்தகுமார் சந்தித்து பேசினார். பின்னர் நேற்று இரவு அங்கேயே தங்கி விட்டார்.

    இன்று அதிகாலை ஜாண் சாந்த குமார் திடீரென மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜாண் சாந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    ஜாண் சாந்தகுமார் பலியானது குறித்து அவரது மனைவி தேவிக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர் தனது குழந்தையுடன் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். கணவரின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

    ஜாண் சாந்தகுமார் பலி யானது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக அவருடன் தங்கியிருந்த நண்பரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பலியான ஜாண் சாந்தகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் தேவியின் சொந்த ஊர் நெல்லை டக்கரம்மாள்புரம் திலகர் நகர் ஆகும். இவர் கடந்த 8 மாதத்திற்கு முன்புதான் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார்.
    Next Story
    ×