search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: பி.ஆர்க். கலந்தாய்வு இன்று நடக்கிறது
    X

    என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: பி.ஆர்க். கலந்தாய்வு இன்று நடக்கிறது

    என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையில் பி.ஆர்க். படிப்பிற்கான கலந்தாய்வு இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கிறது.
    சென்னை:

    பி.இ. படிப்பான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையில் காலியாக இருந்த அருந்ததியினர் இடங்களில் ஆதிதிராவிடர்களை சேர்க்க கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கலந்தாய்விற்கு 118 ஆதிதிராவிடர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 106 பேர் இடங்களை தேர்ந்து எடுத்தனர்.

    இதில் மெக்கானிக்கல் பிரிவை அதிக மாணவர்கள் எடுத்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவை எடுத்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் மொத்தம் 8 இடங்கள் காலியாக இருந்தன. அந்த 8 இடங்களும் ஆதிதிராவிடர்களுக்கு உரியதுதான்.

    பி.ஆர்க். என்று அழைக்கப்படுகிற கட்டிடக்கலை பிரிவு எடுக்க மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு இன்று (சனிக்கிழமை) அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. மற்ற மாணவ-மாணவிகள் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணிவரை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    துணை கலந்தாய்வு இன்று நடக்கிறது. இன்று பகல் 2 மணிமுதல் 3 மணி வரை பதிவுசெய்த மாணவர்களுக்கு கலந்தாய்வு மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    காலியாக உள்ள அருந்ததியினர் இடங்களுக்கு ஆதிதிராவிடர் மாணவர்களை தேர்ந்து எடுக்க இரவு 7 மணிக்கு கலந்தாய்வு நடக்கிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு பெயர்களை பதிவு செய்யவேண்டும்.

    இந்த தகவலை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ளது.
    Next Story
    ×