search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    நாமக்கல்லில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    நாமக்கல்லில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் சேந்தமங்கலம் ரோட்டைச் சேர்ந்தவர் ஷெர்லி. இவர் சொந்தமாக தனியார் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஆனந்த் ரோஸ் ஜான். இவர் அயர்லாந்து நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மகள் ரீனாரோஸ் சாரோன் (வயது 16). இவர் தனது பாட்டி ஷெர்லி நடத்தி வரும் நர்சரி பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார். அதில் 486 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -1 வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது ஷெர்லியும் தனது மகன் ஆனந்த் ரோஸ் ஜான்னுடன் தங்கி இருக்கிறார். ரீனாரோஸ்சை மோகனா என்பவர் பாதுகாவலராக இருந்து கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் ரீனா ரோஸ் வழக்கம்போல் இரவு ரூமில் தூங்க சென்று விட்டார். இன்று காலை விடிந்து நீண்டநேரம் ஆகியும் ரூமின் கதவை அவர் திறக்கவில்லை. இதனால் பயந்து போன மோகனா ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது ரீனாரோஸ் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரீனாரோஸின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் ரீனாரோஸ் என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார் என்று தெரியவில்லை. அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×