search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
    X

    பெரம்பலூரில் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூரில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு சார்பில் விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு சார்பில் விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பெரம்பலூர் புதுபஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன். கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் பொறுப்பாளர் ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் தங்கராசு வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில குழு உறுப்பினர் சின்னதுரை, தனியார் சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு மாநில தலைவர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்

    இதில் தமிழகத்தில் விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும், ஏரிகள் வரத்து வாய்க்கால்களை முறைகேடு இல்லாமல் துவர் வார வேண்டும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், உதய் திட்டம் மூலம் இலவச மின்சாரத்தை நிறுத்த கூடாது, நெடுவாசல்,கதிராமங்கலம் போராட்டத்திற்கு தீர்வு கான வேண்டும், பெரம்பலுவர் சர்க்கரை ஆலையில் இனை மின்சாரம் மற்றும் ஆலை விரிவாக்கம் செய்ய வேண்டும், கல்லாறுசின்ன முட்லுமருதையாறு நீர் தேக்கத்தை உடனடியாக செயல் படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், சிவக்குமார், மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ரவிச்சந்திரன். ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி. அண்ணாதுரை, நல்லத்தம்பி, மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெகதீசன், சோமுமதியழகன், மருவத்துவர் ராஜேந்திரன், நகர செயலாளர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தமிழக விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.

    Next Story
    ×